சாப்பிடும் போது...
ADDED :3745 days ago
சாப்பிடும் முறை குறித்து நபிகள் நாயகம் கூறியுள்ள கருத்துக்கள்:
*உணவு வைக்கப்பட்டால் உங்களின் செருப்புகளை கழற்றி விடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பத்தை அளிக்கும்.
*உங்களின் யாராகிலும் தம் இடது கையால் உண்ணுவதும் (தண்ணீர்) பருகுவதும் கூடாது. ஏனென்றால் இப்லீஸ் (ஷைத்தான்) தனது இடது கையாலேயே குடிக்கிறான்,
உண்ணுகிறான்.
*உங்களின் எவரும் நின்று கொண்டு (தண்ணீர் முதலியன) குடிப்பது ஆகாது. மறந்த நிலையில் (நின்று கொண்டு குடிப்பவர்) அதற்கு பரிகாரமாக அதை வாந்தி எடுத்து விட வேண்டும்.
*எல்லோரும் ஒன்று கூடி உண்ணுங்கள். பிரிந்து விடாதீர்கள். ஒன்று கூடி இருப்பதில் தான் பரகத் இருக்கிறது.