செவ்வாடை பக்தர்கள் பால்குட ஊர்வலம்
ADDED :3351 days ago
மணியனூர்: ஆடி பண்டிகையையொட்டி, செவ்வாடை பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர். சேலம், மணியனூர் அடுத்த காந்திநகரில் பாலவிநாயகர் மற்றும் சக்தி மாரியம்மன் கோவிலில், 38ம் ஆண்டு ஆடி பண்டிகை, கடந்த 26ம் தேதி, பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, காலை 9 மணியளவில், பால்குட ஊர்வலம் நடந்தது. செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், மதுரைவீரன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு வழியாக சென்று, சிவசக்தி நகர் பகுதியில் வலம் வந்து, 11 மணியளவில் கோவிலை வந்தடைந்தது. அதன்பின், அம்மனுக்கு பாலாபி ?ஷகம் செய்து, சிறப்பு வழிபாடு செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.