பானாம்பட்டு கோவிலில் வளையல் அலங்கார பூஜை
ADDED :3351 days ago
விழுப்புரம்: பானாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர வளையல் அலங்கார பூஜை நடந்தது. விழுப்புரம் பானாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வளையல் அலங்கார பூஜை நடந்தது. இதனையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ௧௦௮ வளையல் அலங்காரம் நடந்தது. மேலும், குழந்தை வரம் வேண்டி வழிபட்ட திருமணமான பெண்களுக்கு வளையல் காப்பு நிகழ்ச்சி செய்து வைக்கப்பட்டது. இதில், பக்தர்கள் பலரும் அம்மனை தரிசனம் செய்தனர்.