புனித வனத்து சின்னப்பர் திருத்தலத்தில் தேர்பவனி
ADDED :3356 days ago
விழுப்புரம்: கல்பட்டு புனித வனத்து சின்னப்பர் திருத்தலத்தில், ஆடம்பர தேர் பவனி நடந்தது. விழுப்புரம் அடுத்த கல்பட்டு புனித வனத்து சின்ன ப்பர் திருத்தலத்தில் 2016ம் ஆண்டுப் பெருவிழா, கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி திருப்பலி, நவநாள் திருப்பலி, ÷ தவநற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் 8ம் தேதி ஆடம்பர தேர் பவனியையொட்டி, காலை 6:00 மணிக்கு திருப்பலி, 8:00 மணிக்கு பெருவிழா திருப்பலி, இரவு 8:00 மணிக்கு தேவ நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது. பின், இரவு 10:00 மணிய ளவில் ஆடம்பர தேர்பவனி நடந்தது. புதுச்சேரி–கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.