ஜா.சித்தாமூர் ஐயனார் கோவில் கும்பாபிஷகம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த ஜா.சித்தாமூர் ஐயனார் கோவில் கும்பாபிஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கோவிலுழர் அடுத்த ஜா.சித்தாமூரில் பழமையான ஐயனார் கோவில் உள்ளது. புதுப்பிக்கப்பட்டு இதற்கான கும்பாபிஷகம் நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக 6ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு கோபூஜை சூரிய பூஜை நாடிசந்தானம் தத்துவார்ச்சனை விசேஷ திரவியாகுதி வேதபாராயணம் 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி ஐயனார் சுவாமி மூலகலசத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.