அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு பூஜை
ADDED :3312 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று சுவாதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த அந்திலியில் உள்ள பழமையான லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதி சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் 10:30 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு அர்ச்சனை மகா தீபாராதனை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர்கள் செய்து வருகின்றனர்.