உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்திரப்பட்டி மாரியம்மன் கோயில் முளைக்கொட்டுவிழா

சத்திரப்பட்டி மாரியம்மன் கோயில் முளைக்கொட்டுவிழா

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் ஐந்து ஆயிரத்திற்கும் மேல் பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நேற்று பிற்பகல் நடந்தது.  ஒவ்வொரு ஆண்டும் ஆடி இறுதி வாரத்தில் சத்திரப்பட்டி ஜெயமாரியம்மன்கோயிலில் முளைக்கொட்டு விழா நடக்கும். இதனையடுத்து சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் உள்ள மாரியம்மன்கோயில்களில் பெண்கள் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து, ஊர்வலம் செல்வர். இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு கண்ணாடி சப்பரத்தில் மாரியம்மன்வீதி உலாவுடன் விழா துவங்கியது. இதனைதொடர்ந்து நேற்று பிற்பகல் 4 மணிக்கு அந்தந்த தெருக்களில் வளர்க்கப்பட்ட, முளைப்பாரியுடன் பெண்கள் ஊர்வலம் சென்றனர். பல தெருக்கள் வழியாக சென்று, நத்தம்பட்டி முக்குரோட்டில் உள்ள துரைமட கிணற்றில் நேற்று இரவு கரைத்தனர். இன்று தெருக்களில் மீண்டும் மாரியம்மன் வீதிஉலா நடைபெறும். ஆகஸ்ட் 12ல் மஞ்சள் நீராட்டுவிழா மற்றும் நிர்வாகம் சார்பில் சொற்பொழிவு, கச்சேரி, பட்டிமன்றம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு சங்கரேஸ்வரன் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !