உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நலன் வேண்டி.. பழநியில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி!

உலக நலன் வேண்டி.. பழநியில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி!

பழநி:  உலக நலன்வேண்டி பழநி பெரியநாயகிம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடந்தது.  ஆக.,12ல் வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது. பாதயாத்திரைக்கு பெயர்பெற்ற தைப்பூசவிழா நடைபெறும் பழநி பெரியநாயகியம்மன்கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா ஜூலை 16ல் துவங்கி ஆகஸ்ட் 12 வரை நடக்கிறது. ஆடி 1ல் சிவன், விநாயகரிடம் அனுமதிவாங்கி பெரியநாயகிஅம்மன் சன்னதியில் சங்கல்பம் நடந்தது, அதைத் தொடர்ந்து நாள்தோறும் மாலை 6.30மணிக்கு மேல் நுõறாயிரம் மலர்களால் சிறப்பு லட்சார்ச்சனை மகா தீபாராதனை நடந்தது.விழாவின் முக்கியநிகழ்ச்சியாக, ஆடிலட்சார்ச்சனை வேள்வியில் புனிதநீர் நிரம்பிய கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், 1008 சகஸ்கர நாமம் உள்ளிட்ட லட்ச அர்ச்சனை நடந்தது. சீப்பு, கண்ணாடி, மஞ்சள் கயிறு பொருட்கள் வைத்து சுமங்கலி பூஜை செய்து அவை 108 பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆடி வெள்ளியன்று அம்மன் ஆபரணாதி, முத்தங்கி, சந்தனகாப்பு, மீனாட்சிபோன்ற அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆக.,12ல், இரவு 8.30 மணிக்குமேல் பெரியநாயகி அம்மன் நான்கு ரதவீதிகளிலும் வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !