உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் ரோப் கார் எப்போது?

சதுரகிரியில் ரோப் கார் எப்போது?

விருதுநகர்: சதுரகிரி மலை கோயில் ரோப் கார் அமைப்பு பணிக்காக ஆய்வு செய்து இரு ஆண்டுகளாகியும், திட்டம் கிடப்பில் உள்ளது. சதுரகிரி மலை கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இம்மலை கோயில் 1,200 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், மலையில் ஆறு கிலோ மீட்டர் கரடு முரடான பாதையில் நடந்து செல்ல வேண்டி உள்ளது. ஆண்டு தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை விழாவின் போது பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்கு செல்லும் வகையில் மலையடிவார தாணிப்பாறையில் இருந்து கோயில் வரை 6.கி.மீ.,துாரத்திற்கு ’ரோப் கார்’ அமைக்க சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் திட்டமிடப்பட்டது. இதற்கான ஆய்வு பணி நடத்த ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதிகாரிகள் இரு ஆண்டுகளுக்கு முன் மலையடிவார கோயில் வரை ரோப் அமைக்கும் இடங்களை பார்வையிட்டனர். ரோப் கார் செல்லும் இடங்களில் மலைகள் இடையூறாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின் ரோப் கார் தொடர்பாக எவ்வித பணியும் நடக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதற்கான பணியை விரைவில் துவக்கினால் பக்தர்கள் எளிதாக மலைக்கு செல்லமுடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !