உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை, வைகுண்டம் காத்திருப்பு அறையில் தொலைபேசி வசதி!

திருமலை, வைகுண்டம் காத்திருப்பு அறையில் தொலைபேசி வசதி!

திருப்பதி: திருமலை, வைகுண்டம் காத்திருப்பு அறையில், தொலைபேசி வசதியை ஏற்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, தேவஸ்தான செயல் அதிகாரி சாம்பசிவ ராவ் கூறியதாவது: திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், கோவிலுக்குள், மொபைல் போன் கொண்டு வர தடை உள்ளது. இதனால், தரிசனத்திற்காக காத்திருக்கும், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில், ஒரு ரூபாய் நாணய தொலைபேசி வசதியை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும், 12ம் தேதி முதல், 15ம் தேதி வரை, தொடர் விடுமுறை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இதனால், விரைவாக சுவாமியை தரிசிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !