உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் கருடஜெயந்தி சிறப்பு யாகம்

வரதராஜ பெருமாள் கோவிலில் கருடஜெயந்தி சிறப்பு யாகம்

கடலுார்: கடலுார், வரதராஜ்பெருமாள் கோவிலில் நடைபெற்ற கருட ஜெயந்தி சிறப்பு ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் நேற்று கருட ஜெயந்தி சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி காலை  7:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக வரதராஜ பெருமாள், கருடாழ்வாருடன் ய õகசாலையில் எழுந்தருளினார். காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணிவரை கருட  ஹோமம் நடைபெற்றது. பின்னர் பகல் 1:00 மணி முதல் 3:00  மணி வரை திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு 1008 நாமவளி அரச்சனை நடந்தது. கருடஜெயந்தி விழா  ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், தக்கார் கோவிந்தசாமி, ஆழ்வார், உபயதாரர் ராமசாமி, கோவிந்தம்மாள் குடும்பத்தினர்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !