உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாண்பிள்ளை பெற்றாள் கோவிலில் ஆடித் திருவிழா

நல்லாண்பிள்ளை பெற்றாள் கோவிலில் ஆடித் திருவிழா

செஞ்சி: நல்லாண் பிள்ளை பெற்றாள் திரவுபதி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடந்தது.  செஞ்சி தாலுகா, நல்லாண் பிள்ளை பெற்றாள்  திரவுபதி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு  திரவுபதி அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகள் கிருஷ்ணர், அர்ஜுனருக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.  திரவுபதியம்மனுக்கு மலர் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு கிரு ஷ்ணர், அர்ஜுனர் சமேத திரவுபதி அம்மன் திருவீதி உலா நடந்தது. இரவு 8.00 மணிக்கு வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை  அறங்காவலர்கள் குலசேகரன், எத்திராஜன், தேவராஜ், துரைராஜ், ஆளவந்தார் ஆகியோர் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !