திருத்தணி கங்கையம்மன் ஜாத்திரை விழா
ADDED :3344 days ago
திருத்தணி: கங்கையம்மன் ஜாத்திரை திருவிழாவையொட்டி, உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது. திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட கார்த்திகேயபுரம் மோட்டூர் கிராமத்தில் கங்கையம்மன் ஜாத்திரை விழா, மூன்று நாட்களாக நடந்தது. நேற்று முன்தினம் காலையில், கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூ கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கும்பம் கொட்டும் நிகழ்ச்சியும், இரவு, 10:00 மணிக்கு நாடகமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.