உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் குரு பூஜை விழா

கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் குரு பூஜை விழா

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில்,  சுந்தரமூர்த்தி நாயனாரின் குரு பூஜை விழாவையோட்டி, காலை 9:00 மணி முதல் தமிழ் வேதவார வழிபாட்டுச் சபையின் சார்பில் முற்றோதல் நடந் தது. பின்னர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை  தர்மகர்த்தா ரவிச்சந்திரன், பாலகிருஷ்ண சிவாச்சாரியார், ஓதுவார்கள் பழனியாண்டி ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !