உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி முத்தாளம்மன் கோவில் ஆடி திருவிழா

பொன்னேரி முத்தாளம்மன் கோவில் ஆடி திருவிழா

பொன்னேரி: முத்தாளம்மன் கோவில், ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி அடுத்த, அனுப்பம்பட்டு கிராமத்தில்,  முத்தாளம்மன் கோவில் உள்ளது. கடந்த, 3ம் தேதி,  வாடைபொங்கல் வைக்கும் விழாவுடன், ஆடி திருவிழா துவங்கியது. அதை தொடர்ந்து, காப்புக்  கட்டுதல், கரகம் சுற்றி வருவதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, கூழ்வார்த்தல், மாலையில், பொங்கல் வைத்தல் மற்றும்  தீபாராதனைகள் நடந்தன. இரவு 8:00 மணிக்கு, அம்மன் வீதி உலா புறப்பட்டு, அனுப்பம்பட்டு, உத்தண்டிகண்டிகை ஆகிய பகுதிகள் வழியாக  சென்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !