கோட்டுமுளை கோவிலில் 13ம் தேதி சாகை வார்த்தல்
ADDED :3343 days ago
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த பெரியகோட்டுமுளை முத்துமாரியம்மன் கோவிலில், 13ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி, கடந்த 5ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினசரி, காலை 8:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, இரவு 7:00 மணியளவில் அம்மன் வீதியுலா, காத்தவராயன் கதைப் பாட்டு நிகழ்ச்சி நடந்து வருகிறது. வரும் 12ம் தேதி காலை 9:00 மணியளவில் கருப்புசாமி, அய்யனார் சுவாமிகளுக்கு ஊரணி உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக 13ம் தேதி பகல் 12:00 மணியளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.