சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் இடமாற்றம்
ADDED :3343 days ago
பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன்கோவில் செயல்அலுவலர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழக கோவில்களில் செயல் அலுவலர்களாக பணியாற்றிய, 12 பேருக்கு சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இத்துடன் அவர்கள் பணி இடமாற்றமும் செய்யப்பட்டனர். இவர்களில், சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலராக பணியாற்றிய மணிகண்டன், அவிநாசி அருகேயுள்ள கருவலுார் மாரியம்மன் கோவிலுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சூலக்கல் மாரியம்மன் கோவில் செயல் அலுவலராக(பொறுப்பு) ஜெயசெல்வம் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.