உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒத்த சடையப்பசாமி கோவில் திருவிழா

ஒத்த சடையப்பசாமி கோவில் திருவிழா

அன்னுார்: கரியாம்பாளையம் ஊராட்சி, கிருஷ்ண கவுண்டன்புதுாரில், ஒத்த சடையப்பசாமி கோவில் பொங்கல் திருவிழா நடந்தது. முதல்நாள் மாலையில், ஆதிவிநாயகருக்கு பொங்கல் வைத்தல், யாக பூஜை நடந்தது. இரவு மகா தீபாராதனையும், குதிரை வாகனத்தில், சடையப்ப சாமி திருவீதியுலாவும் நடந்தது. இரண்டாம் நாளன்று, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் நடந்தது. மதியம் குதிரை வாகனம் எடுத்தல், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல் நடந்தது. திருவீதியுலாவில் சுவாமிக்கு, பக்தர்கள் நீர் ஊற்றி வரவேற்பு அளித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !