சென்னிமலை அருகே குருப் பெயர்ச்சி மகா யாகம்
சென்னிமலை: சென்னிமலை அடுத்துள்ள குமராபுரியில், குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, யாக வேள்வி நாளை நடக்கிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி, இன்று இரவு, சிம்மராசியில் இருந்து கன்னிராசிக்கு குரு பிரவேசிக்கிறார். இதற்காக, சென்னிமலை அடுத்துள்ள குமராபுரியில் உள்ள, செங்குந்தர் திருமண மண்டப வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், நாளை மாலை, 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாக வேள்வி பூஜைகள் தொடங்குகின்றன. தொடர்ந்து, 7 மணிக்கு விநாயகர், தட்சிணாமூர்த்தி, நவகிரக குரு பகவானுக்க அபிஷேகம் நடக்கிறது. அடுத்து, இரவு, 9.30 மணிக்கு மஹா தீபாராதனை அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த யாக வேள்விக்கு சென்னிமலை முருகன் அடிமை சுப்புசுவாமிகள் முன்னிலையில், சுப்பிரமணிய சுவாமி கோவில் தலைமை குருக்கள், ராமநாதசிவாச்சாரியார் தலைமையில் ஏழு சிவாச்சாரியர்கள் இந்த யாக வேள்வியை நடத்து கிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜோதிடர் ராஜா செய்துவருகிறார்.