உ.செல்லூர் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா
ADDED :3344 days ago
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை உ.செல்லுார் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா உ.செல்லுார் கிராமத்திலுள்ள ஸ்ரீரேணுகா மாரியம்மன், ஸ்ரீஐயனார், ஸ்ரீவிநாயகர் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 7ம் தேதி மதியம், கிராம மக்கள் கூழ் குடங்களை ஏந்தி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு சுவாமிகளுக்கு படையலிட்டு வழிபட்டனர். இரவு 9:௦௦ மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீரேணுகா மாரியம்மன், ஸ்ரீஐயனார், ஸ்ரீவிநாயகர் சுவாமிகள் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம், எல்லை பிடாரியம்மனுக்கு உயிர் பலி கொடுக்கப்பட்டு, தீபாரதனை வழிபாடு நடந்தது. தொடர்ந்து சுவாமி குதிரை சவாரி, வீதியுலாவும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா நரசன், வழக்கறிஞர் சந்திரசேகரன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.