திருப்பரங்குன்றம் முருகனுக்கு பதக்கம்!
ADDED :3344 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு சென்னை பக்தர் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பதக்கத்தை காணிக்கையாக வழங்கினார். 220 கிராம் தங்கத்தில் கோமேதகம், தலா 8 முத்துக்கள், பச்சை கற்கள், தலா 24 வெள்ளை, சிவப்பு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. துணை கமிஷனர் செல்லத்துரை முன்னிலையில் மணியம் புகழேந்தி, பேஷ்கார் நெடுஞ்செழியன், சிவாச்சார்யார்கள் ராஜா, ரமேஷிடம் வழங்கினார். திருவிழா காலங்களில் சுவாமிக்கு இப்பதக்கம் அணிவிக்கப்பட உள்ளது.