உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை சுப்பிரமணியருக்கு 951 குடம் பாலால் அபிஷேகம்

சென்னிமலை சுப்பிரமணியருக்கு 951 குடம் பாலால் அபிஷேகம்

சென்னிமலை: சென்னிமலை, மலை கோவில் சுப்பிரமணிய சுவாமிக்கு, 951 குட பால் அபிஷேகம் நேற்று நடந்தது. சென்னிமலை மலை கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக்கு, ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. இதன்படி, 49 வது ஆண்டு பாலாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இதற்காக, 951 பக்தர்கள் பால் குடங்கள் சுமந்து, மலை கோவிலுக்கு, படிக்கட்டுக்கள் வழியாக நடந்து சென்றனர். காலை, 11 மணிக்கு தொடங்கிய அபிஷேகம், 12.30 மணிக்கு முடிந்தது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் முத்துசாமி, துணை தலைவர் ஈஸ்வர் மூர்த்தி, பொருளாளர் சாமிநாதன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !