முப்பெரும் வாத்தியத்துடன் தேர் திருவிழா
ADDED :3348 days ago
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், இடையப்பட்டி புதூர், மாரியம்மன் கோவிலில், தேர் திருவிழா, கடந்த, 9ம் தேதி துவங்கியது. அதில், நேற்று மதியம், 2 மணியளவில், மாரியம்மன் தேர் வடம் பிடித்தலில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், தேரை இழுத்துவந்தனர். இதில், நையாண்டி மேளத்தோடு குறவன் ஆட்டம் நிகழ்ச்சி, கேரளா செண்டை மேளம், தப்பாட்ட குழுவினர் ஆகியோர், தேருடன் ஊர்வலம் வந்தனர். இசைக்கேற்ப, கேரளா செண்டை மேள கலைஞர்கள் மற்றும் கரகாட்ட குழுவினர், நடனமாடி பார்வையாளர்களை அசத்தினர். இன்று இரவு, 9 மணிக்கு மேல், அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா, நையாண்டி மேளத்துடன் கரகாட்டம் நடக்கிறது. நாளை, மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவு பெறுகிறது.