உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழவந்தாள் மாரியம்மன் கோயிலின் முளைப்பாரி ஊர்வலம்

வாழவந்தாள் மாரியம்மன் கோயிலின் முளைப்பாரி ஊர்வலம்

கீழக்கரை: ஏர்வாடி வாழவந்தாள் மாரியம்மன் கோயிலின் 22 வது முளைப்பாரி விழா நடந்தது. அம்மன் கரகத்தை பின்தொடர்ந்து முளைப்பாரி ஏந்தியவாறு ஏராளமான பக்தர்கள் ஊர்வலம்  வலம் சென்றனர். தர்கா முன்பு முளைப்பாரிகளை இறக்கி வைத்து பக்தர்கள் கும்மியடித்தனர். தொடர்ந்து தர்காவில் உலக நன்மைக்காக பிரார்த்தனை நடந்தது. சின்னஏர்வாடி கடற்கரையில் முளைப்பாரிகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !