உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராகவேந்திரர் சுவாமி கோவிலில் 2௦ம் தேதி ஆராதனை விழா

ஸ்ரீராகவேந்திரர் சுவாமி கோவிலில் 2௦ம் தேதி ஆராதனை விழா

புதுச்சேரி: பூமியான்பேட்டை ஸ்ரீராகவேந்திரர் சுவாமி கோவிலில், ராகவேந்திரர் சுவாமிகளின் 345ம் ஆண்டு ஆராதனை விழா, வரும் 20ம் தேதி நடக்கிறது. பூமியான்பேட்டை ராகவேந்திரர் நகரில், ராகவேந்திரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, வரும் 20ம் தேதி, ஆராதனை விழாவையொட்டி, சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி சிறப்பு பூஜைகள் துவங்குகிறது. அன்று மாலை, ௬:௩௦ மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், விசேஷ பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. 20ம் தேதி சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு ராகவேந்திர சுவாமிகளின் சுப்ரபாத நிகழ்ச்சி, பின்னர் நித்தியபடி பூஜைகளும், கலச பூஜைகளான மகா கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், ஹயக்கிரீவர் ஹோமம், ஸ்ரீராகவேந்திர சுவாமி அஷ்டரகஷ ஹோமம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அபிஷேகமும், 11:௦௦00 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. சென்னை திருவல்லிக்கேணி குருஜி ராகவேந்திராச்சார் தலைமை தாங்கி, நடத்தி வைக்கிறார். வரும் 21ம் தேதி அபிஷேக ஆராதனையும், திருவிளக்கு பூஜையும் நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.பூஜையில் பங்கேற்க விரும்புவோர், 98437 04951, 97906 66560 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை ஸ்ரீராகவேந்திரா சமூக நலச்சங்கம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !