பச்சையம்மன் கோவிலில் அக்னி கரக விழா!
ADDED :3518 days ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டை பச்சையம்மன் கோவிலில் 4 ம் ஆடி வெள்ளி விழா நடந்தது. மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டையில் மன்னார் சாமி சமேத பச்சையம்மன் கோவிலில் 4 ம் ஆடி வெள்ளி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. உலக அமைதி மற்றும் இயற்கை வள நலன் கருதி பக்தர்கள் பூ கரகம், அக்னி கரகம் எடுத்து கோவில் வளாகத்தை வலம் வந்தனர். இதில் திரளாக கிராம மக்கள் கலந்து கொண்டனர்.