/
கோயில்கள் செய்திகள் / ஆடி கடைசி வெள்ளி: திருவாடானை மகாலிங்கமூர்த்தி கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
ஆடி கடைசி வெள்ளி: திருவாடானை மகாலிங்கமூர்த்தி கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்!
ADDED :3350 days ago
திருவாடானை: திருவாடானை பகுதியில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிழாக்கள் நடந்தது. திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. திருவாடானை ஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயிலில் பூக்குழி விழா நடந்தது. பக்தர்கள் பால், பறவை, வேல் காவடி எடுத்து சென்று தீ மிதித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.