உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரட்டூர் சீயாத்தம்மன் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம்

கொரட்டூர் சீயாத்தம்மன் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம்

கொரட்டூர்: சீயாத்தம்மன் கோவிலில், 60ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் நடத்தது. கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில், அறநிலையத் துறைக்கு சொந்தமான பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில், 10 நாள் ஆடி பிரம்மோற்சவ விழா, கடந்த, 7ம் தேதி துவங்கியது. அன்று பகல், 2:00 மணிக்கு, ஆறு பக்தர்கள், உடலில் மிளகாய் கரைசலை ஊற்றி வழிபட்டனர். விழாவின் கடைசி நாளான நேற்று, 60 ஆண்டுகளுக்கு பின், இரண்டாவது முறையாக, காலை, 6:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. தேர் சென்ற வீதிகளில் உள்ளவர்கள், தேரின் முன் கிடா வெட்டி, இனிப்பு, கசப்பு உள்ளிட்ட அறுசுவை கொண்ட பண்டங்களை படைத்து அம்மனை வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !