உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் பெருமாள் கோவில் மதில் சுவர் ரூ.19 லட்சம் மதிப்பில் சீரமைப்பு

காஞ்சிபுரம் பெருமாள் கோவில் மதில் சுவர் ரூ.19 லட்சம் மதிப்பில் சீரமைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் வடக்கு மாடவீதி மதில் சுவர், 19 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக விளங்கி வரும் வரதராஜப்பெருமாள் கோவில், பல்லவர், சோழர், விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்­பட்டது. இதன் சுற்று சுவரை விஜயநகர மன்னர் காலத்தில் கட்டியுள்­ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தெற்கு மதில் சுவரின் ஒரு பகுதி, மழை யால் பாதிப்­படைந்து, கல் சரிந்து விழுந்து விட்டது. அதை தொடர்ந்து, நான்கு புறத்திலும் சுற்றுச்சுவரை சீரமைக்க, 36 லட்சம்ரூபாய் ஒதுக்கப்­பட்டது. தெற்கு மதில் சுவர் பணி முடிந்து விட்டது. கிழக்கு மற்றும் வடக்கு மதில் சுவர் சீரமைக்க, 19 லட்சம் ரூபாய் செலவில் பணி நடக்கிறது. மதில் சுவர் மேல் பகுதியில் விரிசல் ஏற்­பட்டுள்­ளதால் அதில் மழை நீர் மற்றும் மரங்கள் முளைத்து, மேலும் சேதம் ஏற்­படாமல் பாதுகாக்கும் வகையில், பழமை மாறாமல் சுண்ணாம்பு, கருப்புக்கட்டி, கடுக்காய் சேர்த்து, மேல் பகுதியை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பணி முடிந்து விடும் என, கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !