உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 21ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையையொட்டி,  கடந்த 12ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையை  சந்திரசேகர் சர்மா, வைச சித்தாந்த ரத்தினம் ராஜன், குமார் ஆகியோர் செய்தனர். பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இரவு  9:00 மணிக்கு உற்சவர் அம்மன் ஆலய உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !