உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி அவிட்ட விழா கோலாகலம்: கத்தி போட்ட பக்தர்கள்!

ஆவணி அவிட்ட விழா கோலாகலம்: கத்தி போட்ட பக்தர்கள்!

சென்னை : ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும், திருமண மண்டபங்களிலும், புதிய பூணுால் அணியும் விழா நடந்தது. சென்னை பிராட்வே கொத்தவால்சாவடியில், உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், நங்கநல்லுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பூணுால் அணியும் விழா நடந்தது.

சேலம்: குமாரபாளையத்தில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, பூணூல் பண்டிகை கொண்டாட்டம் நடந்தது. குமாரபாளையத்தில், ஆண்டுதோறும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, பூணூல் பண்டிகை நடப்பது வழக்கம். நேற்று, அதை முன்னிட்டு, பூணூல் அணியும் விழா நகரில் பல்வேறு இடங்களில் நடந்தது. சேலம் பிரதான சாலை சவுண்டம்மன் கோவில், குள்ளங்காடு, காவேரி நகர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தகுடங்கள் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. தாய்மார்களுக்கு மஞ்சள் கயிறு, குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அம்மன் அருள்பாலிக்க, முக்கிய வீதிகளின் வழியாக, சவுடேஸ்வரி அம்மன் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !