உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு மதுரா வடக்குசென்னிநத்தம் கிராமத்தில் உள்ள பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்கு சென்னிநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.  நேற்று காலை சிவ பூஜை, கோ பூஜை, யாக பூஜையை தொடர்ந்து காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:16 மணிக்கு கோபுர கலசத்திற்கு  புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் அருண்மொழித்தேவன் எம்.பி., முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், ஒன்றிய செயலர் சிவப்பிரகாசம், பேரூராட்சி  துணைத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !