உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசை., கோவில் தசரா திருவிழா துவக்கம்!

குலசை., கோவில் தசரா திருவிழா துவக்கம்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா, நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மைசூருக்கு அடுத்தபடியாக, இக்கோவில் தசரா புகழ்பெற்றது. கொடியேற்றத்திற்குப் பின் பக்தர்கள் காப்பு கட்டியும், மாலையணிந்தும் விரதத்தைத் துவக்குவர். பத்து நாள் திருவிழாவில், தினமும் முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை,தீபாராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, அம்மன் சூரனை வதம் செய்யும் மகிஷாசூர சம்ஹாரம், பத்தாம் நாளான அக்., 6ம் தேதி நள்ளிரவு, கோவில் கடற்கரையில் நடக்கிறது. தூத்துக்குடி,நெல்லை, குமரி மாவட்டங்களில் நேர்த்திக் கடனுக்காக, பல்வேறு வேடங்களை அணிந்து குழுக்களாக, கிராமம் கிராமமாக கலை நிகழ்ச்சி நடத்தி காணிக்கை பிரிக்கும் பக்தர்கள், அன்று கோவிலைச் சேர்ந்து, வேண்டுதலை நிறைவேற்றுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !