உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாலைப்பணிகளின் போது அம்மன் சிலை கண்டெடுப்பு!

சாலைப்பணிகளின் போது அம்மன் சிலை கண்டெடுப்பு!

நெய்வேலி:என்.எல்.சி., புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது, பூமிக்கு அடியிலிருந்து, அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.கடலூர் மாவட்டம், நெய்வேலி முதல் அனல் மின் நிலையத்திற்கு மாற்றாக, என்.எல்.சி., ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் உள்ள கைக்கோளர்குப்பம் கிராமப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய அனல் மின் நிலையக் கட்டுமானப் பணிகளின் ஒரு கட்டமாக, சாலைகள் போடும் பணி நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது, பூமிக்கு அடியிலிருந்து, 3 அடி உயரமும், 2 அடி அகலம் கொண்ட அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.கிராம மக்கள் திரண்டு வந்து, கீற்றுக் கொட்டகை அமைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.விருத்தாசலம் வருவாய்த் துறை அதிகாரிகள், அம்மன் சிலையை ஆய்வுக்காக எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு, அப்பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்த பின், அதிகாரிகள், சிலையை எடுத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !