சங்கராபுரத்தில் தேர் திருவிழா
ADDED :3384 days ago
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. சங்கராபுரம் அம்பேத்கர் நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, நேற்று காலை நடந்தது. முன்னதாக கடந்த 9ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி, 16ம் தேதி அம்மனுக்கு பாலாபிஷேகம், சாகை வார்த்தல், ஊரணி பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் வீதி உலா வந்தது. நேற்று அலங்கரிக்கபட்ட தேரில், அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது. இதில், தாசில்தார் திருநாவுக்கரசு, முன்னாள் பேருராட்சி தலைவர் ஆசிம், தொழிலதிபர் காமராஜ், நியூ பவர் பள்ளி தாளாளர் துரை, முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் சுப்ரமணியன், தர்மகர்த்தா பாலசுப்ரமணியன், கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ரங்கசாமி, ராமு, சீனுவாசன், கவுன்சிலர் கோவிந்தன், பூசாரி ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.