பெரியகாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3380 days ago
கரூர்: கடவூர் அருகே வீரியப்பட்டி பெரியகாண்டியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று (ஆக., 20ம் தேதி) அதிகாலை, 5 மணிக்கு மங்கள இசை, 5.30 மணிக்கு கணபதி வேள்வி, காலை, 8.30 மணிக்க யாக நிறைவு, மாலை, 3 மணிக்கு தீர்த்தம் அழைப்பு, மாலை, 5.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, காப்பு அணிவித்தல், கலச அலங்காரம், யாக சாலை எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், முதல்கால வேள்வி, நாளை காலை, 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, காலை, 7.35 மணிக்கு சிறப்பு யாக பூஜை, காலை, 8.30 மணிக்கு யாக நிறைவு, காலை, 8.45 மணிக்கு மதுரை வீரன் கோவிலில் கும்பாபிஷேகம், காலை, 9.35 மணிக்கு விமான கும்பாபி?ஷகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.