சங்ககிரி மாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :3380 days ago
சங்ககிரி: தேவூர் அருகே, மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். சங்ககிரி ஒன்றியம், தேவூர் அருகே, சென்றாயனூர், மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 3ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜை நடந்தது. 17ம் தேதி இரவு, மாரியம்மன் சன்னதி முன் அமர்ந்து, பெண்கள் மாங்கல்ய பூஜை செய்தனர். 18ம் தேதி மாலை, பக்தர்கள் காவிரி ஆற்றிற்கு சென்று, அம்மனுக்கு அலங்காரம் செய்து, ஊர்வலம் சென்றனர். நேற்று காலை, பெண்கள் மாவிளக்கு எடுத்து, நாக்கு அலகு குத்தி, அக்னி கரகம் எடுத்துவந்தனர். பின், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.