ராகவேந்திரா சுவாமியின் ஆராதனை விழா
ADDED :3380 days ago
நாமக்கல்: ராகவேந்திரா சுவாமிகளின், 345வது ஆராதனை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் கோட்டைச்சாலை கார்நேசன் சத்திரத்தில், ஆண்டு தோறும், ராகவேந்திரா சுவாமிகளின், ஆராதனை விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ராகவேந்திரா சுவாமிகளின், 345வது ஆராதனை விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை, 9 மணிக்கு மஹா பூஜை, 11 மணிக்கு மங்களாராத்தி, பகல், 12 மணிக்கு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்தனர்.