நாகராஜாகோயிலில் ஆவணி ஞாயிறு பெண்கள் திரளாக பங்கேற்பு!
நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நடைபெற்ற ஆவணி ஞாயிறு விழாவில் திரளான பெண்கள் பங்கேற்று நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர்.
கோயில்களில் நாகர் சசன்னதிகள் இருந்தாலும், நாகரை மூலவராக கொண்ட கோயில் நாகர்கோவில் நாகராஜாகோயில். கோயில்களுக்கு மூலஸ்தான கோபுரங்கள் இருக்கும். ஆனால் இங்கு நாகர் பிரதிஷ்டை இன்னும் ஓலை கூரைக்குள்தான் இருக்கிறது. நெல்லை மாவட்டம் களக்காட்டை தலைநகராக கொண்டு வேணாடு ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னன் பூதலவீர உதய மார்த்தாண்டன் தனது தீராத சசரும வியாதிக்காக, நாகராஜா கோயிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து பூஜைகள் செசய்ததால் குணமடைந்தார். இதன் பின்னர் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினர். இங்கு பால்ஊற்றி வழிபாடு நடத்தினால் திருமண தடை நீங்கும், குழந்கை பாக்கியம் கிடைக்கும் என்பது பெண்கள் நம்பிக்கை. நேற்று ஆவணி முதல் ஞாயிறு நாளில் அதிகாலை முதலே பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீண்ட வரிசைசயில் நின்று நாகர்சிலைகளுக்கு பெண்கள் மஞ்சசள் கலந்த பால் ஊற்றி வழிபட்டனர். பக்தர்களை ஒழுங்கு படுத்துவதற்காக மூங்கில் கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது.