உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் ராகவேந்த்ரர் மடத்தில் தீபோத்சவம்!

திருவள்ளூர் ராகவேந்த்ரர் மடத்தில் தீபோத்சவம்!

திருவள்ளூர் : திருவள்ளூர் ராகவேந்த்ர சுவாமி மடத்தில், ராகவேந்த்ர சுவாமி ஆராதனையை முன்னிட்டு, 10,008 மகா தீபோத்சவம் நடந்தது. ராகவேந்த்ரர், பிருந்தாவனத்தில் பிரவேசம் செய்த நாள், அவருடைய ஆராதனை நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, 345வது ஆராதனை மஹோத்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு, திருவள்ளூர் தெற்கு குளக்கரை தெருவில் அமைந்துள்ள ராகவேந்த்ர சுவாமி மடத்தில் கடந்த, 19ம் தேதி சத்யநாராயண பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று முன்தினம் காலை, ஹரிவாயுஸ்துதி ஹோமமும், தொடர்ந்து, ராகவேந்த்ர சன்னிதியில் விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அன்றிரவு, 10 ஆயிரத்து எட்டு மகா தீபோத்சவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !