புஷ்ப பல்லக்கில் கடலுார் நாகம்மன் வீதியுலா
ADDED :3473 days ago
கடலுார்: கடலுார் நாகம்மன் கோவில் செடல் பெருவிழாவில் அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது. கடலுார் பஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நாகம்மன் கோவில் செடல் பெருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் தீபாராதனை, அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த 19ம் தேதி செடல் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் தீபாராதனை, மஞ்சள் நீராட்டு விழா, புஷ்ப பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.