உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்த பாண்டியர் காலத்து சிவன் கோயில்!

சிதிலமடைந்த பாண்டியர் காலத்து சிவன் கோயில்!

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாண்டியர் காலத்து சிவன் கோயில் சிதிலமடைந்து வருகிறது.ஆர்.எஸ்.மங்கலம் அருகே கள்ளிக்குடி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோயில் உள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியில் இருப்பதால் வெளியே தெரியவில்லை. இதனால், பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. ராமநாதபுரம் ஞான தீப சேவா சங்க தொண்டர்கள் சில நாட்களுக்கு முன் கோயிலை அடையாளம் கண்டனர். இதையடுத்து, சேவா சங்க தொண்டர்களுடன் கிராம மக்களும் இணைந்து கோயிலில் உழவாரப் பணிகள் மேற்கெண்டனர். சிவன் கோயில் உள்பகுதியில் உள்ள உத்தம பாண்டீஸ்வரி சமேத வேதேஸ்வரி அம்மன் சன்னதியும் பாழடைந்து காணப்பட்டது.கி.பி.,6ம் நுாற்றாண்டு புத்தர், சமணர் சிலைகள் கோயிலில் இருந்ததாகவும், காலப்போக்கில் மண்ணில் புதைந்து போனதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

பாண்டிய மன்னர்கள் வந்து சென்றதற்கான அடையாளங்களும் கோயிலில் உள்ளதாக தெரிவித்தனர்.ஞான தீப சேவா சங்க நிர்வாகிகள் சேதுபதி, கோகுலக் கண்ணன் கூறுகையில், தற்போது உழவாரப் பணிகள் மேற்கொண்டுள்ளோம். நித்திய பூஜைகளுக்கான பணிகளை செய்து வருகிறோம். சிவன் கோயிலில் அம்பாள் சன்னதியும், எதிரே சிறிய நந்தி மண்டபமும் உள்ளது. மின்சார வசதி இல்லாததால் தீப வெளிச்சத்தில் பூஜை செய்கிறோம். பொதுமக்களின் ஒத்துழைப்போடு தினமும் சிவ பூஜை செய்யப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !