கண் திருஷ்டி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3378 days ago
ஊத்துக்கோட்டை: பொதுமக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட கண் திருஷ்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூண்டி ஒன்றியம், மயிலாப்பூர் கிராமத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன், 20 அடி உயர கண் திருஷ்டி விநாயகர் சிலை, சிவபெருமான் கோவில், அகத்தியர் கோவில் ஆகியவை கட்டப்பட்டன. பணிகள் முடிந்து, நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம், முதல்கால யாக பூஜை, 108 திவ்ய ஹோமம், இரவு, 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு, 2ம் கால யாகபூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம் ஆகியவையும், தொடர்ந்து மகா கும்பாபிஷேகமும் நடந்தன. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.