பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா
ADDED :3378 days ago
அனுப்பர்பாளையம்: குன்னத்தூர் அருகே வெள்ளியம்பதி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, நேற்று நடைபெற்றது. குண்டம் திருவிழா, 18ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், செவ்வாடை உடுத்தி, குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் நாளை இரவு மறு பூஜை, மஞ்சள் நீர் ஊற்றுதல்; வரும், 24ம் தேதி, மாலை கழற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. குன்னத்தூர், ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.