பூமியான்பேட்டை ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா
ADDED :3378 days ago
புதுச்சேரி: பூமியான்பேட்டை ராகவேந்திரர் கோவிலில் நேற்று முன்தினம் 345ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. பூமியான்பேட்டை ஸ்ரீராக÷ வந்திரர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் 345வது ஆராதனை விழா மகோற்சவம் சென்னை திருவல்லிக்கேணி குருஜி ராகவேந் திராச்சார் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, ராகவேந்திரர் சுப்ரபாத நிகழ்ச்சியும், நித்தியபடி பூஜைகளும், கலச பூஜைகளும் நடந்தது. தொடர்ச்சியாக, மகா கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமங்கள் நடந்தது. காலை, 10.30 மணிக்கு அபிஷேகமும், 11.30 மணிக்கு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராகவேந்திரா சமூக நலச்சங்கம் செய்திருந்தது.