பொள்ளாச்சி பகுதியில் தயார் நிலையில் விநாயகர் சிலைகள்
ADDED :3378 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டதிற்காக, சிலை வடிவமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் செப்டம்பர் 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி வரவுள்ளது. விதவிதமான விநாயகர் சிலைகளை வைத்து, அலங்கரித்து, பூஜைகள் செய்து, பண்டிகை முடிந்த பிறகு நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கரைப்பது வழக்கம். இந்த சிலை செய்வற்கு களி மண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத வண்ணங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிலில் பொள்ளாச்சி பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் தற்போது பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர். குளத்து மண்ணைப் பயன்படுத்தி, இயற்கை வண்ணங்களுடன், மண்பாண்ட கலைஞர்கள் கைவண்ணத்தில், நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.