இரும்பை கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :3378 days ago
புதுச்சேரி: இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில், நேற்று திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி அண்ணாமலையார் கிரிவலக் குழு மற்றும் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், புதுச்சேரி–திண்டிவனம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள, இரு ம்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில், நேற்று திருவாசக முற்றோதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 7:00 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சியில், திருக்கழுகுன்றம் தாமோதரன் தலைமை தாங்கி, திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில், ஏராளமான சிவ பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.