உடையவர் கோட்டை கும்பாபிேஷக விழா
ADDED :3378 days ago
கும்மிடிப்பூண்டி: உடையவர் கோட்டை யில், கும்பாபிேஷக விழா மற்றும் பெருமாள் திருக்கல்யாண வைபவம் நடை பெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே செங்கல்சூளைமேடு கிராமத்தில், உடையவர் கோட்டை என அழைக்கப்படும், அலர்மேல் மங்கை சமேத வெங்கடேச பெருமாள் பகவத் ராமானுஜர் கோவில் அமைந்துள்ளது. ராமானுஜரின், 1,000வது அவதார ஆண்டை முன்னிட்டு, நேற்று அந்த கோவிலில், கும்பாபிேஷக விழா நடைபெற்றது. காலை, 8:30 மணிக்கு கும்பாபிேஷகமும், பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிேஷகம் மற்றும் திருக்கல்யாண வைபத்தில் பங்கேற்று, பெருமாளின் திருவருளை பெற்றனர். கோவில் வளாகத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.