உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.  விக்கிரவாண்டி பேட்டை தெருவில் பொதுமக்களால்  புதியதாக செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கான  கும்பாபிேஷகத்தை யொட்டி கடந்த 20 ம் தேதி மாலை 6 மணிக்கு  மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சாமிகள் , நிலத் தேவர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடுடன் முதல் கால வேள்வியை துவக்கி  வைத்தார். தொடர்ந்து, நேற்று காலை   8 மணிக்கு கோ பூஜையுடன் இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 10.20 மணிக்கு கடம் புறப்பாடு  நடந்தது. 10.30 மணிக்கு செல்வ விநாயகர் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.    கூட்டேரிப்பட்டு சிவமூர்த்தி  தலைமையில் சதாசிவம் மற்றும் சிவனடியார்கள் தமிழ்வழி முறையில் வேள்வி, யாகசாலை பூஜைகளை செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.  ÷ பட்டை தெரு நாட்டாண்மை பலராமன் தலைமையில் விழாக்குழுவினர் , இளைஞர்கள் முன்னின்று கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர் .  விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் திரளாக கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !