புதுப்பாளையம் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை
ADDED :3378 days ago
கடலுார்: புதுப்பாளையம் ராகவேந்திரர் சுவாமி கோவிலில் ஆராதனை விழா சிறப்பு பூஜை நடந்தது. கடலுார், புதுப்பாளையம் ராகவேந்திரர் சுவாமி கோவிலில் 38வது ஆண்டு ஆராதனை விழா 19ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் பஜனை, சிறப்பு அர்ச்சனை நடந்தது. இரவு பி ரகலாதரும், ராகவேந்திரரும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை லட்சுமி நரசிம்மருக்கும், ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பூஜை, ராகவேந்திரர் சகஸ்ரநாம அர்ச்சனையும், மாலை குளக்கரை விநாயகருக்கு மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.